Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை: நவ. 01 – தமிழ்நாடு நாள் | மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி | சீமான் | பெ.மணியரசன்

Contact Us  To Add Your Business

திட்டமிட்ட, பாதுகாப்பான பயணம் மேற்கொள்வீர்..!

என் உயிரோடு கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

நாளை நவம்பர் 01 – ‘தமிழ்நாடு நாள்’ அன்று, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத்திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைந்து முன்னெடுக்கும் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்பதற்காக வருகை தரவிருக்கும் உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்க பெரும் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் காத்திருக்கின்றேன்.

உறுதியாக திட்டமிட்டபடி நடைபெறவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பெருநிகழ்வில் பேரெழுச்சியுடன் கலந்துகொள்ள வருகை தரும் பேரன்பிற்குரிய உறவுகளும், தம்பி-தங்கைகளும் பயணத்தை மிகவும் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக நெடுந்தொலைவிலிருந்து பல மணி நேரங்கள் வாகனங்களில் பயணித்து வரும் உறவுகள் எவ்வித அவசரமுமின்றி, நிதானமாக வாகனங்களில் பயணித்து வரவேண்டுமெனவும், அதற்கேற்றவாறு பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு தொடங்க வேண்டுமெனவும் அன்புடன் அறிவுறுத்துகிறேன். பயணத்தின் பொழுது நம்மால் மக்களுக்கு எந்த இடைஞ்சல்களும் ஏற்படாதவாறு கட்டுக்கோப்புடன் நடந்துகொள்ளவேண்டும் எனவும் கண்டிப்புடன் அறிவுறுத்துகிறேன். தலைக்கவசம், இடவாறு அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி நீங்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக வருகை தந்து, பேரணியில் பங்கேற்றுவிட்டு, பாதுகாப்பாக வீடு சென்று சேர்ந்துவிட்டீர்கள் என்ற செய்தியை அறிந்த பிறகுதான் என் மனம் நிம்மதி அடையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நம்முயிர்த் தமிழ்க்காக்க நாம் அனைவரும் உணர்வெழுச்சியோடு ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இப்பெருமைமிகு பேரணியில் நீங்கள் ஒவ்வொருவரும் பங்கேற்பது எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு உங்களுடைய பாதுகாப்பும் முக்கியம் என்பதை அன்பு உறவுகள் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
தமிழ் மீட்சியே! தமிழர் எழுச்சி!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
மற்றவை நேரில்…

உங்கள் அண்ணன்
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here  To Add Your Business

29 comments

  1. மகிழன் நாடார்த்தமிழர்

    அனைவருக்கும் தமிழ் நாடு நல்வாழ்த்துகள்…… நாம் தமிழர்….. ???

  2. ஆனந்த் தமிழன்

    மாபெரும் வெற்றி பெற்று உள்ளோம், தமிழ் செந்தங்களே, இனி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்

    1. Vimal S

      இல்லை. போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. நாமே நம்மை ஏமாற்ற வேண்டாம். முதலில் EVM வேண்டாம் என்பதை முடிவு செய்யுங்கள், இல்லாவிடில் மண்ணை வாரி தலையில் போட்டு கொள்ளவும்.

  3. eli kuncharalingam

    நம் மொழி காக்க இனம் காக்க பாசிச பாஜகவின் இந்தி திணிப்பை எதிர்ப்போம். . ???????????? ???..
    திணிக்காதே திணிக்காதே. இந்திய திணிக்காதே. ?????????

  4. Saravanamuthu Rajacon

    பேரணியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். வாழ்க தமிழ். வளர்க்க தமிழகம்.

  5. ஜி.ஆர்.உதயகுமார்

    இலக்குஒன்றுதான்இனத்தின்விடுதலை!இனம்ஒன்றாவோம்இலக்கைவென்றாவோம்!வீழ்ந்திடாதவீரம்!மண்டியிடாதமானம்!நாம்தமிழர்நாமேதமிழர்!சென்னையிலிருந்து

  6. Thiru Murthy

    அனைத்து உயிர்களும் அடுத்தடுத்த தலைமுறையும் வாழ இந்த புரட்சி கண்டிப்பாக வென்றாக வேண்டும்

  7. Bava Idappadi

    இந்தி எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்ட உறவுகளுக்கு புரட்சி வணக்கம்.

  8. Rajesh Rajesh

    நாம் தமிழர் கட்சி கூடலூர் சட்டமன்றத் தொகுதி பந்தலூர் நீலமலை மாவட்டம்

  9. You Tube

    திராவிடம் என்பது தமிழர் அல்லாதோர் கூட்டமைப்பு ஆகும்

    திராவிடம் என்பது தமிழர் அல்லாத பிறமொழியாளர்களின் கூட்டமைப்பு ஆகும்

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே
    இங்கு பிறப்பினும் அயலான் அயலானே

    1. Rama Chandran

      உங்கள் ஊரில் எவன் தமிழன் என்று தேடிச்சென்று அவனிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தமிழர்களிடம் விழிப்புணர்வை உருவாக்கினால் மட்டுமே!!!!! தமிழர்கள் வாழமுடியும்!

  10. PURCHASE DAZEE INK

    அண்ணா உங்கள் போரட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்,. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவசாலில் வாங்கு சொல்லுறது இன்னும் அரபி மொழியில் சொல்லுறாங்க. ஒண்ணும் புரியவில்லை. தமிழ்நாட்டில் எப்போது தமிழில் வாங்கு சொல்லுவார்கள் . அதற்க்கு ஒரு போராட்டம் பண்ணுங்க அண்ணா . நாம் தமிழர் கட்சி, பிரான்ஸ் .

  11. Nagendran Ramasamy

    நவம்பர் மாதம் நமக்கு முக்கியமான மாதம். நம் நிகழ்ச்சிகள் இந்த மாதம் மழை பெய்யாத மேற்கு மாவட்டங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும்.சங்கிகளும் வட இந்தியர்களும் மேற்கு மாவட்டங்களில் தான் அதிகம் குடியமர்த்தப்படுகின்றனர்.மாவீரர் நாள் கூட்டம் வடமேற்கு மாவட்டத்தில் நடந்த வேண்டும்.ஆனால் நல்லவர்கள் கூடும் போது மழை கட்டாயம் பெய்யும்.

  12. Sivagnanam Perumal

    இலக்குஒன்றுதான்இனத்தின்விடுதலை!இனம்ஒன்றாவோம்இலக்கைவென்றாவோம்!வீழ்ந்திடாதவீரம்!மண்டியிடாதமானம்!நாம்தமிழர். from Australia

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE