பி.பி.சி. தமிழ் – விளையாட்டுச் செய்திகள்
BBC News தமிழ் - விளையாட்டு BBC News தமிழ் - விளையாட்டு
- நியூசிலாந்து தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது இந்தியா on February 3, 2019 at 11:19 am
5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில், தொடரை வென்று 3-1 என்ற நிலையில் இந்தியா முன்னிலை வகிக்கும் சூழலில், இறுதி போட்டியையும் அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது. […]
- அல்ஸாரி ஜோசப்: தாய் இறந்த துக்கத்திலும் ‘தாய்நாட்டுக்காக’ களமிறங்கிய மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் on February 3, 2019 at 10:03 am
''இந்த சூழலில் களமிறங்கி அல்ஸாரி ஜோசப் விளையாடியது அவரின் மிகப் பெரிய தியாகத்தையும், பொறுப்பையும் காட்டுகிறது'' என்று ஜேசன் ஹோல்டர் குறிப்பிட்டார். […]
- நியூசிலாந்து 15 ஓவரில் வென்றது எப்படி? இந்தியா 92 ரன்னில் சுருண்டது ஏன்? on January 31, 2019 at 5:42 am
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 212 பந்துகள் மீதமுள்ள நிலையிலேயே வெற்றியை சுவைத்தது நியூசிலாந்து. இதற்கு முன்னதாக கடந்த 2010-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியொன்றில் இலங்கை அணி 209 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியை சுவைத்தது. […]
- India vs New Zealand: நியூசிலாந்து மண்ணில் தொடரை வென்றது கோலி படை on January 28, 2019 at 10:03 am
பே ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றுவரும் இந்தியா நியூசிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் தோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் சேர்த்துக்கொல்லப்பட்டார். விஜய் சங்கருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா இணைந்தார். […]
- நிறவெறி தாக்குதல்: பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமதுக்கு தடைவிதிப்பு on January 27, 2019 at 11:50 am
கிரிக்கெட் ஸ்டம்பில் பொருத்தப்பட்ட மைக்ரோபோனில் கருப்பு என்று பொருள்தரக்கூடிய ''காலா'' என்ற வார்த்தையை தென் ஆப்ரிக்க வீரர் குறித்து சர்பராஸ் அகமது பயன்படுத்தியது ஐசிசி நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. […]
- India Vs NZ 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்ற இந்தியா on January 26, 2019 at 9:13 am
இந்திய கிரிக்கெட் அணியின் முதல் 5 ஆட்டக்காரர்கள் அனைவரும் அதிக ரன்கள் எடுத்தது, இந்த போட்டியில் வெற்றிபெற பெரிதும் உதவியுள்ளது. […]
- மனம் திறக்கும் பி.வி.சிந்து: "சாய்னாவுக்கும் எனக்கும் பகையில்லை" on January 26, 2019 at 6:35 am
பேட்மிண்டன் விளையாட்டில் உலகளவில் தொடர் சாதனைகளை படைத்து வரும் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுடனான பிபிசியின் பிரத்யேக நேர்காணல். […]
- கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி - 5 முக்கிய காரணங்கள் on January 23, 2019 at 9:15 am
நியூசிலாந்து ஆடுகளங்கள் வேக பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போட்டியில் இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது வியப்பை ஏற்படுத்தியது. […]
- ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா நியூசிலாந்தில் சாதிக்குமா? on January 22, 2019 at 1:24 pm
ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா, வரவிருக்கும் உலகக்கோப்பையை மூன்றாவது முறையாக கைப்பற்றும் என அதன் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் உள்ள இவ்வேளையில் நடைபெறும் இந்தியா-நியூசி தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. […]
- ஐசிசி விருதுகள்: மூன்று ஐசிசி விருதுகளை அள்ளிய விராட் கோலி - வரலாற்றில் முதல்முறை on January 22, 2019 at 7:43 am
டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டில் வீரர்களின் செயல்திறனை கணக்கிட்டு அதற்கேற்ப அணி உருவாக்கப்பட்டுள்ளது. […]
- உலகின் இளைய கிராண்ட் மாஸ்டரான சென்னை சிறுவன் on January 20, 2019 at 4:02 pm
உலகின் இரண்டாவது மிக இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற தகுதியை சென்னையைச் சேர்ந்த டி குகேஷ் பெற்றிருக்கிறார். […]
- ஆஸ்திரேலிய சாம்ராஜ்யத்தை வீழ்த்திய இந்தியா - உலகக்கோப்பையை வெல்லுமா கோலியின் படை? on January 19, 2019 at 2:07 am
''இதற்கு முன்னர் நடந்த ஆஸ்திரேலிய தொடர்கள் இந்திய வீரர்களின் நம்பிக்கையை குலைத்து, சிலரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துள்ளது. ஆனால், இந்த சுற்றுப்பயணம் எதிர்வரும் ஆண்டுகளில் இந்தியாவின் சிறப்பான பங்களிப்புக்கும், வரலாற்று வெற்றிகளுக்காகவும் பெரிதும் பேசப்படும்'' […]
- India vs Australia : தோனி, சாஹல் அபாரம் : ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை on January 18, 2019 at 11:52 am
மெல்பர்னில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றுள்ளது. […]
- INDIA vs AUSTRALIA : தோனியின் கடைசி ஓவர் சிக்ஸர், கோலியின் சதம் - இந்தியா வெற்றி on January 15, 2019 at 12:41 pm
அடிலெய்டில் இன்று நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியுள்ளது இந்தியா. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 1-1 என சமநிலைக்கு வந்துள்ளது. […]
- ஹர்திக் பாண்டியா விவகாரமும், கிரிக்கெட்டில் உள்ள பாலியல் பாகுபாடும் on January 14, 2019 at 8:28 am
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹர்திக் பேசியதை பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என புறக்கணித்திருப்பார்கள்.ஆனால், தற்போது காலம் மாறிவிட்டது. […]
- India Vs Australia: ரிஷப் பந்த் அதிரடி ஆட்டம் - தோனியின் இடத்தை பூர்த்தி செய்கிறாரா? on January 7, 2019 at 11:30 am
தோனியின் ஓய்வுக்கு பிறகு இந்திய விருத்திமான் சாஹா, பார்த்தீவ் படேல், தினேஷ் கார்த்திக் என சீனியர் வீரர்களை விக்கெட் கீப்பராக களமிறக்கியது கோலி மற்றும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம். […]
- India Vs Australia: தொடரை இந்தியா வெல்ல காரணம் பேட்ஸ்மேன்களா? பந்துவீச்சாளர்களா? on January 7, 2019 at 6:57 am
பேட் செய்வது ஆஸ்திரேலியா தானா என்று ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் எதிரணியை தங்கள் வேகம் மற்றும் நேர்த்தியால் தடுமாற செய்தனர். […]
- இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்: டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது எப்படி? முக்கிய காரணங்கள் on January 7, 2019 at 4:03 am
72 ஆண்டுகளில் தனது முதல் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவில் வென்று சாதனை படைத்துள்ள இந்தியா, இந்த தொடரில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்கியது. […]
- ‘அச்ரேக்கர் சார்! என் பேட்டிங் பற்றி இன்றாவது ஒரு வார்த்தை சொல்ல மாட்டீங்களா! சச்சின் நெகிழ்ச்சி on January 3, 2019 at 7:37 am
''நான் பேட் செய்யும்போது எனது ஸ்டெம்புக்கு மேல் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை அச்ரேக்கர், வைப்பார். நான் அவுட்டாகவிட்டால் அந்த நாணயத்தை நான் எடுத்து கொள்ளலாம். அப்படி நான் சேகரித்த நாணயங்கள் விலைமதிப்பில்லாவை'' […]
- 2018 விளையாட்டு உலகம்: அதிரடி கோலி, தளராத செரீனா, கலங்கவைத்த சுனில் சேத்ரி, சாதித்த சிந்து on December 31, 2018 at 11:02 am
அடுத்த ஆண்டில் அல்லது மாதத்தில் யார் புகழின் உச்சியில் இருப்பார், யார் ஒய்வு பெறுவார், தோல்வியடைவார் என தெரியாத திருப்பங்கள் நிறைந்த விளையாட்டு உலகம், 2018-ஆம் ஆண்டில் நிறைய ஆச்சரியங்களை அள்ளி தெளித்துள்ளது. […]
- இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்: இந்திய வெற்றிக்கு 5 முக்கிய காரணங்கள் on December 30, 2018 at 3:07 am
1981க்கு பிறகு மெல்போர்ன் மைதானத்தில் முதல்முறையாக டெஸ்ட் போட்டியை வென்ற இந்தியா, ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. […]
- இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட்: ‘பேட் செய்ய விருந்தாளி வந்திருக்கிறார்’ - மோதிய பெய்னை பழிதீர்த்த பந்த் on December 29, 2018 at 10:40 am
''இவரை அவுட் ஆக்க எதுவும் செய்ய வேண்டாம். இவருக்கு பேச மட்டும்தான் தெரியும். பேச்சு; பேச்சு, பேச்சு மட்டும்தான்!'' என்று தன்னை கிண்டல் செய்த பெய்னுக்கு ரிஷப் பந்த் பதிலடி தந்தார். […]
- இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்: பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் கோலியின் படை சரித்திரம் படைக்குமா? on December 26, 2018 at 12:54 am
பொதுவாக பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ரசிகர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் விளையாடும் ஆஸ்திரேலிய அணியை வெல்வது எந்த ஒரு அணிக்கும் பெருஞ் சவால். […]
- ஆர்ச்சி ஷில்லர்: இதய அறுவை சிகிச்சைக்குள்ளான 7 வயது சிறுவன் ஆஸ்திரேலியாவின் துணை கேப்டன் on December 25, 2018 at 3:50 am
மெல்பர்னில் நடக்கவுள்ள இப்போட்டியில் ஏழு வயது சிறுவன் ஆர்ச்சி ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுக்கு உதவும் விதமாக துணை கேப்டனாக செயல்படுவார் என்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம். […]
- டபிள்யு.வி.ராமன்: இந்திய பெண்கள் கிரிக்கெட் பயிற்சியாளர் ஆகிறார் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் on December 21, 2018 at 11:03 am
முன்னாள் இந்திய பேட்ஸ்மேனான டபிள்யு.வி ராமன் இந்திய பெண்கள் அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். […]
- வருண் சக்ரவர்த்தி : 7 விதமாக பந்தை வீசும் வீரர் 8.4 கோடிக்கு ஏலம் போனது எப்படி ? on December 19, 2018 at 7:05 am
பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் விதமாக தனது சுழல் பந்துவீச்சில் 7 விதமான மாற்றங்களுடன் பந்துவீசுவார் வருண். […]
- ஐபிஎல்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 8.4 கோடிக்கு ஏலம் on December 18, 2018 at 2:43 pm
இவ்வளவு பெரிய தொகைக்கு தான் ஏலம் எடுக்கப்பட்டது குறித்து வருணுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. […]
- கோலி -பெய்ன் மோதல் - பெர்த் டெஸ்ட் படுதோல்விக்கு கோலி சொல்லும் காரணம் என்ன? on December 18, 2018 at 11:39 am
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய பிறகு சுமார் எட்டு மாதங்களுக்கு பின்னர் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியொன்றை வென்றுள்ளது. […]
- கிரிக்கெட்: சித்துவின் ஆட்டோகிராஃபை பெற ஏழு வயது ரசிகரின் ஒரு நாள் போராட்டம் on December 15, 2018 at 1:09 am
செய்தியாளர் ஒருவர் சித்துவின் இல்லத்தில் இருந்து வெளியே வருவதை பார்த்த அந்த சிறுவன், "அமைச்சர் சித்துவின் கையெழுத்து எனக்கு கிடைக்குமா?" என்று அப்பாவித்தனமாக கேட்டான். […]
- ஆஸ்திரேலியா - இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்: 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றி on December 10, 2018 at 8:28 am
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் வரும் 14ஆம் தேதி தொடங்குகிறது. […]
- கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பு என்ன? on December 6, 2018 at 8:03 am
இரண்டு உலக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் களம் கண்ட கௌதம் கம்பீர், இரண்டாவது முறை இந்தியா உலகக்கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். […]
- விராட் கோலி: ஆஸ்திரேலிய மைதானங்களை காதலிப்பவர் on December 6, 2018 at 1:04 am
ஆஸ்திரேலிய ஊடகங்களும் விராட் கோலியை இலக்கு வைத்து செய்திகள் வெளியிட்டன. பின்னர் விராட் கோலி இரண்டு இன்னிங்ஸில் இரண்டு சதங்களை அடித்து அசத்தினார். […]
- கவுதம் கம்பீர்: இரண்டு கிரிக்கெட் உலகக்கோப்பைகளில் முத்திரை பதித்த இந்திய பேட்ஸ்மேன் on December 5, 2018 at 1:40 pm
இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மற்றும் உலக கோப்பையை வென்றவருமான கவுதம் கம்பீர் நேற்று ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். […]
- “எல்லா போட்டிகளிலும் என் கவனம் ஒன்றாகவே இருக்கும்” - ஷிகர் தவன் on December 1, 2018 at 4:20 am
ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாததால் இந்தியா அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும என்று கிரிக்கெட் வீரர் ஷிகர் தவன் கூறியுள்ளார். […]
- உள்ளூரில் ஹாக்கி உலகக்கோப்பை - இந்தியாவின் 43 ஆண்டு காத்திருப்பு கைகூடுமா? on November 28, 2018 at 11:56 am
இந்திய அணி இடம்பெற்றிருக்கும் பிரிவானது மற்ற பிரிவை விட சற்றே எளிதானது. ஆகவே காலிறுதி வரை பெரிய பிரச்னை இருக்காது. இருப்பினும் கனடா மற்றும் பெல்ஜியத்திடம் இந்தியா கவனமாக இருப்பது அவசியமே. […]
- மேரி கோம் சர்வதேச மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஆறாவது முறை தங்கம் வென்று உலக சாதனை on November 24, 2018 at 1:59 pm
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த மேரி கோம் மூன்று பிள்ளைகளின் தாய் ஆவார். […]
- டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வி : ‘மித்தாலி ராஜை நீக்கியது இமாலய தவறு’ - சாடும் நிபுணர்கள் on November 23, 2018 at 11:44 am
''உடல்தகுதி நன்றாக இருந்தும் மித்தாலி ராஜ் ஏன் அணியில் இடம்பெறவில்லை என்பது இனிவரும் நாட்களில் பெரும் விவாதமாக மாறலாம்'' […]
- மொஹம்மத் ஷசாத்: 16 பந்தில் 74 ரன் குவித்து சாதனை - டி10 கிரிக்கெட் போட்டியில் அதிரடி on November 22, 2018 at 11:41 am
டி 10 லீக் கிரிக்கெட் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு போட்டியில் 16 பந்தில் 74 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார் மொஹம்மத் ஷசாத். […]
- தினேஷ் கார்த்திக் - ஷிகர் தவான் போராட்டம் வீண் - இந்தியா தோற்றது ஏன்? 5 முக்கிய காரணங்கள் on November 21, 2018 at 12:50 pm
42 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த தவான் மற்றும் 13 பந்துகளில் 30 ரன்கள் குவித்த தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடி ஆட்டம் ஏன் இந்தியாவுக்கு கை கொடுக்கவில்லை? […]
- மகளிர் டி20 உலக கோப்பை 2018: இந்தியா கோப்பையை வெல்லுமா? on November 9, 2018 at 2:37 pm
ஹர்மான்பிரீத், மித்தாலி, ஸ்மிரிதி, ஜெமிமா போன்ற வீராங்கனைகளால் இந்திய மகளிர் அணியின் பேட்டிங் சிறப்பாக இருப்பதால் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கூறலாம் […]