Aval Vikatan

அவள் விகடன்

 • தொழில் வழிகாட்டி: “இப்போ எங்க தன்னம்பிக்கை அதிகரிச்சிருக்கு!”
  on February 3, 2019 at 7:00 am

  ‘என்னதான் கடினமா உழைச்சு தொழில் செய்துட்டிருந்தாலும், எப்போ, எப்படி, என்ன பிரச்னை வருமோ என்ற பயம் மனசுக்குள்ள ஓடிட்டேதான் இருக்கும். இப்போ இந்தப் பயிற்சியை முடிச்ச பிறகு, பிரச்னை வந்தா அவற்றையெல்லாம் எப்படிக் கையாளணும் என்கிற தெளிவு கிடைச்சிருக்கு. அதுவே, எங்க தன்னம்பிக்கையையும் அதிகரிச்சிருக்கு!’ - இந்தப் பெண்கள் இதைக் கூறும்போது, இவர்கள் பெரிய பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்ட உறுதி தெறிக்கிறது. […]

 • எதிர்க்குரல்: திரௌபதி - மஹாஸ்வேதா தேவி
  on February 3, 2019 at 7:00 am

  முள்ளம்பன்றியின் மேலுள்ள முட்கள் போல உடலிலுள்ள மொத்த அணுக்களும் அதிர்ந்து விழித்துக்கொண்டன. ஆனால், தோப்தி திரும்பவில்லை. அவள் நடந்து கொண்டிருந்தாள். ஒரு பெண் சோறு வடித்துக் கொடுத்திருந்தாள். […]

 • நாகூர் ஹனீபாவுக்கு அப்புறம் சரளாதான்னு இருந்தது ஒரு காலம்! - பாடகி சரளா
  on February 3, 2019 at 7:00 am

  சென்னை கோவூரில், ஒற்றைப் படுக்கையறை கொண்ட அந்த வீட்டுக்குள் நுழையும்போது, நம்மை முந்திக்கொண்டு இரண்டு, மூன்று தெரு நாய்கள் வாலாட்டியபடியே வீட்டுக்குள் நுழைகின்றன. பாயில் உட்கார்ந்துகொண்டிருந்த சரளாம்மா, […]

 • கதை சொல்லத் தெரிந்தால் அரசு வேலை! - தீபா கிரண்
  on February 3, 2019 at 7:00 am

  உலகளவில் கதை சொல்லும் கலையில் பிரபலமானவர்களில் ஒருவர், தீபா கிரண். இரானில் நடைபெற்ற சர்வதேச கதை சொல்லும் திருவிழாவில் கலந்துகொண்ட முதல் இந்தியப் பெண் என்கிற பெருமைக்குரியவர் […]

 • நீங்களும் செய்யலாம் - டூட்டி ஃப்ரூட்டி தயாரிப்பு - கிருஷ்ண பிரபாவதி
  on February 3, 2019 at 7:00 am

  டூட்டி ஃப்ரூட்டி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே? கடைகளில் வாங்கும் கேக், பிஸ்கட், பிரெட் மற்றும் இனிப்புகளில் கலர் கலராக... குட்டிக்குட்டித் துண்டுகளாக டூட்டி ஃப்ரூட்டி சேர்க்கப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். பலரும் அதை ஏதோ வெளிநாட்டுப் பொருள் என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள். அது எளிமையாக வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய பொருள் என்கிற தகவல் அவர்களுக்கு நிச்சயம் வியப்பளிக்கும். ஆமாம்... நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பதுபோல டூட்டி ஃப்ரூட்டி தயாரிப்பென்பது பெரிய இயந்திரங்களோ, இடவசதியோ தேவைப்படுகிற வேலையல்ல. […]

 • கடைக்காரனும் கணவனும் - சிறுகதை
  on February 3, 2019 at 7:00 am

  வாழ்நாளில் ஒரே ஒரு தடவையாவது அவள் கணவன் தானாகவே அவள் கேட்காமலேயே கடைக்குப் போய் ஒரே ஒரு புடவை, அதுவும் அவளுக்குப் பிடித்த நிறத்தில், பிடித்த துணியில், பிடித்த டிசைனில், ரொம்பவும் விலை மலிவில்லாமல் அவளுக்குத் தெரியாமல் அவளை ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் […]

 • கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 15 - கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள்!
  on February 3, 2019 at 7:00 am

  பங்குச் சந்தை முதலீடு பற்றி நான் கூறிய விஷயங்களைப் படித்துப் பார்த்த வாசகிகள், `மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன' என்று கேட்டு, அடுத்த அத்தியாயத்துக்கு அடியெடுத்துத் தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல […]

 • பொதுஅறிவுப் புதிர் போட்டி!
  on February 3, 2019 at 7:00 am

  அவள் வாசகிகளே, இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள். கூடவே, `RmKV’ பற்றி அழகான ஸ்லோகன் எழுதி, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான ஸ்லோகனும் எழுதி அனுப்பும் வாசகிகளில் 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் RmKV வழங்கும் ` 2,000 மதிப்புள்ள புடவை அனுப்பி வைக்கப்படும். பரிசாக அளிக்கப்படும் புடவைகளை மாற்றம் செய்ய இயலாது. […]

 • பதினெட்டாம் பிறந்தநாளுக்குக் காத்திருக்கேன்! - குஷி பர்மார்
  on February 3, 2019 at 7:00 am

  ``எனக்கு எப்போது 18 வயதாகும்னு காத்துக்கிட்டிருக்கேன்.அதுக்கான காரணத்தைக் கடைசியில் சொல்றேன்’’ என்ற ட்விஸ்ட்டுடன் ஆரம்பித்தார், குஷி பர்மார். ஸ்கூபா டைவிங் மற்றும் நீச்சல் போட்டிகளில் தேசிய, சர்வதேச அளவில் பல சாதனைகளைப் படைத்துவரும் 16 வயதுப் பட்டாம்பூச்சி. புனே நகரில் வசிக்கும் குஷியிடம் பேசினோம். […]

 • ஆண் குழந்தைக்கு சமையல் கற்றுக்கொடுங்கள்!
  on February 3, 2019 at 7:00 am

  ரோட்டுக்கடை முதல் ஸ்டார் ஹோட்டல்கள் வரை மிகப் பெரும்பாலும் ஆண்கள்தான் செஃப். கப்பல் முதல் வெளிநாட்டு ரெஸ்டாரன்ட்டுகள் வரை பல ஆண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது சமையற்கலை. இந்த ஆண்களில் எத்தனை பேர் தங்கள் வீட்டு சமையலறையில் தன் மனைவிக்கு உதவுகிறார்கள்? எத்தனை ஆண்கள் வீட்டு வேலைகளைச் செய்ய முன்வருகிறார்கள்? வீட்டு வேலைகளில் ஒன்றை ஆண் செய்துவிட்டால், அவரைத் தியாகி போலவே பெண்கள் கொண்டாடுவது ஏன்? இப்படிப் பல கேள்விகள் ஆண் பெண் சமத்துவத்தின் முதுகில் ஆணிகளாகப் படிகின்றன. […]

 • அவள் வாசகியின் 24 மணி நேரம்
  on February 3, 2019 at 7:00 am

  மதிய உணவு எடுத்துக்கொண்டு, பணிக்குக் கிளம்புதல் தி.நகர், நுங்கம்பாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உட்பட ஐந்து கிலோமீட்டர் வட்டாரத்தில்... ஆர்டர்படி உணவுகளை இடைவெளியில்லாமல் டெலிவரி செய்தல் […]

Leave a Reply